Monday, June 05, 2006

கல்லறைப் பூக்கள்



கல்லறைப் பூக்கள்

ராணியின் சிந்தனைகள் மெல்லென சிறகுகள் விரிக்கத் தொடங்கின....

மனிதர்களின் கோலங்கள் அவள் முன் மின்மினிப் பூச்சிகள் போல் வந்து வந்து மறைந்தன. அவளை கொஞ்சம் கொஞ்சமாக வதக்கி பிழிய ஆரம்பித்தது. உண்மைதான் உலகம் ஒரு ஆட்டிப் படைக்கும் விஷக் கிருமியாச்சே.என்னவென்று சொல்வது? எதை சொல்வது? அவள் மனம் போடத் தொடங்கியது. போதுமா.. இல்லை விடைபெறுவோமா..
அவள் மனதில் இருந்த கனவுகள் எல்லாம் மறைந்து போனது இல்லை…மனிதர்களால் கசக்கப்பட்டது உண்மை எது பொய் எது என சிந்திக்க மறுக்கும் உலகில் இருந்து வாழ்க்கைப் பயணத்தை தொடர தடுமாறினாள். காரணம் வாழ்க்கையும் அவள் நட்பை உணர மறுத்து விட்டது. விடை கேட்டாலும் விடைதான் கிடைத்து விடுமோ..? புரியவில்லை அவள் மனது
மனிதர்களின் மனதுக்குள் இத்தனை அகிம்சையா..வாழ்க்கையின் விழும்பில் நின்று விம்மி விம்மி அழுகின்றாள். சிந்தனைகளை சிதறடித்து வார்த்தைகளை சிதற விடும் மனிதர்களே…ஏன் சிந்திக்க மறுக்கின்றார்கள்? சிந்திக்கின்றாள் ராணி.
இவர்கள் மனிதர்களா..?
இல்லை நடமாடும் பிணங்களா..?
அவள் சொல்லி அழவும் யாரும் இல்லை..சொல்லவும் வழி இல்லை..புலம்புகின்றாள்.
அகிம்சையாக்கிய உலகிற்க்கு முற்றுப் புள்ளி வைக்கின்றாள்.
உண்மையை உணரமுடியாத மனிதர்களிடம் போராடுவதை விட தன்நம்பிக்கை என்ற பயணத்தை ஆரம்பித்தாள். நட்புக்கு உரம் கொடுத்தாள் அழிக்க முடியாத படி வரம் கொடுத்தாள். மூடர்களின் கதை கேட்டு அவள் முடங்கி விடவில்லை. தன்நம்பிக்கையான ஆழத்தை வெளிப்படுத்தினாள்.வாழ்க்கையின் விழும்பில் இருந்துவாழ்க்கைக்கு செல்கின்றாள் ராணி.
ஒவ்வொரு வினாடியும் தன் நட்புக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தாள்.சமுதாயம் தூற்றினாலும் தன் நட்பில் நம்பிக்கை வளர்க்கின்றாள்.உண்மையை கற்றுக் கொள்ளாத மனிதர்களிடம் இருந்து மெல்லென நகர்ந் தாள். அவர்களின் வார்த்தைகள்தான் அவளின் நட்புக்கு உரமானது.
சமுதாயத்தின் வார்த்தைகள் தடுமாறிய போதும் தன் வாழ்க்கையை தடுமாற்றம் இல்லாமல் பாதுகாத்தாள்.
அவர்கள் மனது சிந்திக்க மறுத்து வீசிய வார்த்தைகளை ஆழமாகப் பதித்தாஅவளுக்குள்ளே புழுங்கிக் கொண்டாள்.
தொலை பேசியில் கேலி செய்த வார்தைகள் உணர்வற்ற மனிதர்களின் பரீட்சைஅவள் வாழ்க்கைக்கு விஷப் பரீட்சையானது…சுகமான நட்பை இதயத்தில் சுமந்து கொண்டு இதில் இருந்து மீள்வதற்காக தன் சினேகிதி வீட்டுக்கு ஒரு மாத லீவில் பயணமாகின்றாள் ராணி.
நூல்வேலி…
மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே.............
காலை ஆறு மணிக்கு அவள் பயணம் ஆரம்பமாகின்றது…
ஸ்சில் தன் பக்கம் இருந்த கண்ணாடியை மெதுவாக இறக்கி விட்டுபசுமைகள் நிறைந்த பாதைகளை ரசித்துக் கொண்டு செல்கின்றாள்.
ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு பசுமை நினைவுகள் அவள்மனதை வருடிச் செல்கின்றது.
அவள் சோகத்தைமறக்கச் செய்தது. அந்த பயணமும் பசுமையும்…அவள் இறங்கும் இடம் வர தன் சுமைகளையும் பஸ்சில் இறக்கி விட்டு இறங்கி தன் சினேகிதி வீட்டுக்குள் புகுந்து கொள்கின்றாள்…ராணி.
நித்தியாவின் தாய்
பவானி….வாம்மா....ராணி…...உனக்காகத்தான் வாசலில் காத்து நின்றேன்.
பயணம் நன்றாக இருந்ததா?…என பவானி கேட்கராணி…ஆம் அன்ரி சந்தோசமாக இருந்தது.
ஒவ்வெரு கிராமங்களைரசித்து வரும்போது தூரம் தெரியவில்லை..என்றாள்.
அப்படியா…சரி போய் குழித்து விட்டு வாம்மா.. சாப்பிட என்றாள் பவானி.இல்லை அன்ரி நித்தியா வரட்டும் சேர்ந்து சாப்பிடலாம் என்றாள் ராணி.
நித்தியா..வர என்னும் மூன்று மணி நேரமாகும். நீ…பிள்ளை சாப்பிட்டுஅவள் றூமில் போய் ஓய்வெடு.
அவள் வந்ததும் இருவரும் சேர்ந்துகதைக்கலாம் என்றாள் பவானிராணியும் சரி அன்ரி குழித்து விட்டு வருகின்றேன் என்றாள். பவானி சாப்பாடு ரெடி செய்ய, ராணியும் குழித்து விட்டு வந்து சாப்பிட்டாள். பவானி நித்தியா வின் றூமைக் காட்டினாள்.
ராணியும் அவள் றூமுக்குச் சென்றாள்.
அவள் தனிமையில் இருக்க அவளை மீண்டும் சமுதாயத்தின் சீர்கேடு ஞாபகப் படுத்த அவள் கண்ணில் இருந்து கண்ணீர் பெருகியது.
அவள் சமாதானத்துடன் எழுந்து நித்தியாவின் றூம் யன்னலை திறந்து மாலைப் பொழுதின் இதமான காற்றை சுவாசித்துக் கொண்டு அங்கும் இங்கமாக பார்த்தாள்.மலைகளும் பசுமைகளுமாகக் காட்சி கொடுத்தது.
அந்த அழகிய கிராமம் மெல்லிய பனித் துளிகள் இலைகளில் இருந்து விழ அதை கையால் ஏந்திக் கொண்டு இருக்க....
ஒரு குரல் அவளை அழைக்கின்றது
இனிமையான குரல் அவள் இதயத்தில் அவளுக்கும் தெரியாமல் புகுந்து கொள்கின்றது…ஒருகனம் அப்படியே தன் நிலை மறந்து பாடலை ரசிக்கின்றாள் ராணி..
நிலாவே. வா..
மலையோரம் வீசும் காற்று மனதோடு பாடும் பாட்டு...............
அந்தப் பாடலை அவளாள் விடமுடியவில்லை…
எங்கேயோ.. நீ….இருந்து என் மீது போர் தொடுக்க கொல்லாதே...பாவம் இந்தஜீவன்தான்..........
அந்தவரிகளை… மீண்டும் மீண்டும் பாடுகின்றாள் மனதுக்குள்.
யார் என விழிகள் தேட ஆரம்பித்தன..
அவள் நினைவுகளுடன் இருக்க..நித்தியா…றூமுக்குள் புகுந்து கொள்கின்றாள்.
ஏய்……எப்படியடி இருக்கின்றாய் உனை பார்த்து எத்தனை வருடம் ஆகி விட்டது?
இப்பத்தான் வந்திருக்கின்றாய் என அவளை கட்டி அணைத்து கத்தினாள்.
இருவரும் சந்தோசமாக பேசிக்கொண்டார்கள்.
பவானி..நித்தியா சாப்பிட்டு ஆறுதலாக கதையுங்கள் இருவரும்.என தாய் கூப்பிட நித்தியா….சரி அம்மா என பதில் கொடுத்தாள்.
நித்தியா….ராணி நான் லீவு எடுத்துள்ளேன் நாளை இந்த அழகிய கிராமத்தை சுற்றிப் பார்க்கலாம் என…கூறிய படி உறங்கி விட்டார்கள்.
மறுநாள் காலை இருவரும் கிராமத்தை சுற்றிப் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்து மீண்டும் யன்னல் ஓரமாக நிற்க்கின்றாள்..அதே…குரல்.....அவள் காதில் அவளாள் மறக்க முடியவில்லை..நித்தியாவை கேட்கின்றாள்…ராணி....யாருடைய குரல்? யார் பாடுவது? எனகேட்க.நித்தியா….
ஓ…இதுவா…?
அது பக்கத்து வீட்டில் சீடியில் போகுதடி அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.
இருந்தும் அந்தக் குரலுக்கு சொந்தமானவரைக் கண்டு பிடிக்க முடிவெடுத்தாள் ராணி...நித்தியாவிடம் கேட்டாள்.
நான் போவதற்க்குள் இந்தக் குரலுக்குரியவரை பார்க்க வேண்டும் என கேட்டாள்.
நித்தியா…பார்க்கலாம் தொலை பேசி இலக்கம் வாங்கித் தருகின்றேன் என்றாள்.
நித்தியாவும் பல இடங்களில் விசாரித்து தொலை பேசி இலக்கத்தைபெற்ரு அவள் கையில் ஒப்படைக்கின்றாள்.
ராணியும் ஆனந்தத்துடன் அதை வாங்கினாள்.இருந்தும் அவள் மனது தடுமாறியது.
எப்படி ஆரம்பிப்பது?
என சிந்தித்தாள்.
இரு நாட்களுக்கு பின் அந்த இலக்கத்தை தொலைபேசியில் சுழட்டுகின்றாள்.
ஹலோ…ஹலோ…என அழைக்க ஹரி…யார் நீங்கள் என கேட்டுக் கொண்டான்.நான்…நான்….உங்கள் ரசிகை என பதில் கொடுத்தாள் ராணி.
ரசிகையா…?
எனக்கு பல ரசிகர்கள் இருக்கின்றார்கள்நீங்கள் யார் என்று சொல்லவில்லையே..?
என்றான் ஹரி.
நான் இரு வாரமாகத்தான் உங்கள் பாடல்கள் கேட்டேன்.

எனக்கு உங்கள் இனிமையான பாடல்கள்.

என் இதயத்தில் பதிந்து விட்டன.

உங்கள் குரலையும் நான் நேசிக்கின்றேன் என்றாள்.

உங்கள் பாடல்கள் வெளியான சீடி.யும் சேகரித்துக் கொண்டு இருக்கின்றேன் என்றாள்.ஹரியின் மனது சிந்திக்க ஆரம்பித்தது.

என்ன…இவள் வித்தியாசமான ரசிகையாக இருக்கின்றாள்.
கேட்பவர்கள் ஒரு விதம் ரசிப்பவர்கள் ஒருவிதம்.

இவள் இரண்டையும் தாண்டிய இன்னொரு ரகமா..?

அவன் மனதில் கணப் பொழுதில் பதிந்து விட்டாள் ராணி..

தொலைபேசி அழைப்பு இருவருக்கும் இடை வெளி இல்லாமல் தொடர்ந்து செல்லும் போது..இருவரும் ஒருவரை ஒருவராக காதலில் சிக்கித் தவித்தார்கள்

அவளின் லீவும் முடிவு பெற மூன்று நாட்கள்தான் உள்ளது.

ஹரிக்கும் இவள் பிரிவு வேதனையாக்கியது…காதல் பரிசொன்றை தபாலில் அனுப்பினான்.

அவன் ஒரு பாடகன் என்பதை அந்தப் பரிசு உணர்த என்னும் அவள் நேசிக்கத் தொடங்கினாள்…அவள் வீட்டுக்கு புறப்பட தயாராகும் போது அவனின் காதல் பரிசை கையில் எடுத்து தன் பாதங்களில் கட்டினாள்.

அவள் நடக்கும் போதெல்லாம் அந்தக் கொலுசின் ஓசை அவனின் உயிர் ஓசையாக ரசித்தாள்.

தன் தோழியிடம் இருந்து விடை பெற்ருக் கொண்டு பஸ்சில் ஏறி இருக்கையில் இருந்து கொண்டு தன் கொலுசை தட்டி சத்தத்தை ரசிக்கத் தொடங்கும்போது..பஸ்சில் அவன் பாடிய பாடல் அவள்

காதினில் ஒலிக்கின்றது

காதல்ஓவியம்....

வெள்ளிச் சலங்கைகள்........................

பாடலை ரசித்து விட்டு பயணத்தின் பாதையில்அவள் தன் ஹரிக்கு கடிதம் எழுதினாள்.

தன் உணர்வுகளை கடித மூலம் எழுதுகின்றாள்.அன்பான ஹரி…என் பயணம் சந்தோசமாக கழிந்து கொண்டு இருக்கின்றது. பயணத்தின் பாதையில் இம்மடலை எழுதுகின்றேன்.

ஹரி…உங்கள் முகத்தை நான் பார்க்கவில்லை.இருவரும் புகைப்படத்தைத்தான் பரிமாறிக் கொண்டோம். உங்கள் கொலுசுதான் என் காதலுக்கு அத்திவாரம்.

உங்கள் தாலிக்கும், பொட்டுக்கும் நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கின்றேன்.

பெற்றேரிடம் கதைத்து உங்களுக்கு கடிதம் நல்ல செய்திகளுடன் போடுவேன்.

அதுவரை காத்திருக்கவும்

இப்படிக்குஉங்கள்

ராணி.

தபாலை எழுதி முடித்து விட்டு பஸ் நிற் கும் வரை காத்திருந்தாள்.

பஸ் இடையில் நின்றதும் ஓடிப் போய் தபாலை.. பேட்டு விட்டு வருவதற்குள் பஸ் புறப்பட அவசரமாக ஏறும்போது அவள் கால் தடக்கி..விழுந்த போது அவள் உதடுகள் தடுமாறின.

அவள் வார்த்தைகளை தன் காதலுக்கு கொடுத்துக் கொண்டே மரணித்து விட்டாள் ராணி.

பயணிகள் என்ன செய்வது என்று புரியாத போது அவள் உள்ளங்கையில் ஹரியின் பெயரும், தொலைபேசி இலக்கமும் இருப்பதைக் கண்டு உடனே அவனை வரவழைத்தார்கள்.

அவன் ஆசைகள் எல்லாம் மண்ணுக்குள் புதைக்கப்பட்டன.அவன் தன் காதல் சாம்ராஜ்சியம் சரிந்து போயின என கதறினான்.

அவள் நினைவாக அவள் காதலை மட்டும் சுமந்து கொண்டு கல்லறையில் தன் இறுதிப் பாடலை பூவாகத் தூவுகின்றான் ஹரி…..

ஓ ராகினி என் உயிர் நீயடி நீ இல்லையே நான் ஏதடி........ராகினி.

ராகினி

germany