Thursday, July 17, 2008

காதல்



காதல்


-----

கலைந்து கரைந்து போன காதல் நினைவுகளை பலைய பாடல்களின் என் நினைவுகளை மீட்டிப்பார்க்கின்றேன்.நினைவுகளை மீட்டிப்பார்க்கும் போதுதான் கண்கள் கசிந்து போனாலும் இசைகள் மீண்டும் வாழ வைக்கின்றன. எந்த மானிடப்பிறவியிலும் என்னை பொறுத்தவரை காதல் என்ற வார்த்தைகள் மலர இடம் இல்லை. இப்பிறவியில் காதல் தந்த வேடிக்கையும் உரிமை இல்லாத வார்த்தைகளும் மெய்யொன நம்பி நம்மை நான் இழந்தது போதும்.

என் தொலைந்த வசந்தம் மீண்டும் வராவிட்டாலும் எனக்கு இந்த இசைகள் போதும் .வாழ்ந்து மடிந்து போக.


உன்னை நான் சந்தித்த முதள் நாள். நீ..பாடிக்கொண்டு இருந்த போது என் செவிகள் இதமாகி என்னை ரசிக்க வைத்த பாடல் இது http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=32244


உன் நிலையை அறிய உன்னிடம் மெல்ல மெல்ல எழுந்து வந்தன என்கால். அப்போ இரவு 10.30 உன்னை நான் அழைப்பதற்குள் அடுத்தபாடல் உனது கரங்கள் தொட்டன அது இதுதான்"நான் ஒரு ராசி இல்லா ராஜா...."
http://www.raaga.com/playerV31/index.asp?pick=3310&mode=3&rand=0.9777356608007855&bhcp=1
என்னை அறியாமல் எனக்குள் ஒரு தேடல் சாதரனமாக இந்தப்பாடல்களை நாம் நினைத்துவிடுவாதா..?! அதற்குள் அயிரம் கேள்விகள் இருந்தாலும் நாம் தீர்த்துவைக்கூடிய கேள்விகளை தீர்த்து வைக்க ஓடிவந்தோன் உன் பாதங்களில் முதலாக. நான்.


1-முதல் காதல் மலர்ந்த போது நீ கூறியது ..அன்பே அமுதே அரும் கனியே..என்று கொஞ்சிய வார்த்தையில் மயங்கி உன்னிடம் என்னை விழ வைத்த பாடல் இது.









2-சரி இதுதான் இப்படி என்றா உன் அடுத்த பாடல் உன் ஆசைகளை என்னிடம் சொன்னாய் ..ஆசை கிழியே நீ..வா.என்றும் அரும் கலைவாணி ஆடும் ராணி பாடும் தேனி கொஞ்சிய மொழி கெஞ்சிய வார்த்தை அழகிய தமிழ் உச்சரிப்பு என்னை ஆக்கிரமித்து உன்னிடம் என்னை சரணடைய வைத்ததுஅப்பப்பா என்னை நானே கிள்ளி பார்த்தேன் நிஜம்தானா எனக்கு கிடைத்த அன்பு என்று.









3-என் பொறுமையை இழக்கச்செய்தாய் உன் அன்பை கண்டு என் கண்கள் கூட ஏக்கமாக உன்னை பார்வை இட்டன உன் அனபில் என்னை தாலாட்டினாய் உன் மடிதனில் இந்ததாலட்டில் என்னையே மறந்தேன் இத்தனைகாலம் என் கண்கள் உறக்கத்தை இழந்து இருந்தனஉன் இசைமடியில் இதவும் இந்தப்பாடலை நீ உன் மடிதனில் ஊஞ்சல் கட்டி என்னை தூங்கவைத்து போது என் குழந்தை மனம் செல்லமாக தூங்கியது.
இந்தப்பச்சைகிழிக்கு.






4-தூங்கிஎழுந்த போது என் கண்கள் உன்னை தேடியது பரிதாபமாக தேடியது மனது துடித்தன அப்போது உன்னிடம் இந்தக்கேள்வியை கேட்க வேண்டும் என்று துடித்தது எனக்கு மட்டும் எப்பவும் என்னோடு நீ..வேண்டும் என்று என்மனம் தவிக்க தொடங்கியது. அப்போது உன்னிடம் என் கேள்விகளை இப்படிதானே கேட்க முடியும்.









5-உனது பதில்கள் என்னை வாழவைக்க தொடங்கியது அதிகமாக உன் உதடுகள் உன் உள்ளத்தில் இருப்பதை சொன்னது நீ..உன்றும் உன் பூர்வஜென்ம பந்தம் உன்னையே நான் என் இதயத்தில் கடி புகுத்தி உள்ளேன் எனி எவருக்குமே இடம் இல்லை நீதான் என் மனைவி என்றும் இதில் உனக்கு சந்தேகமே வேண்டாம் என்று சொன்னது உன் உதடும் பாடலும்
நம் இரு உடலும் ஒரு உயிராகி அத்வைதமாகி போன நம் காதலை ரசித்து அப்படி பாடி பாடி மகிழ்தோம் இருவரும்.எப்படியா.. எங்கோ நீயும் இருந்து கனவு கட்டாய் நானும் அதே நிமிடம் கனவு கண்டேன் மறுநாள் உரையாடியபோதுதான் நான் கண்ட கனவும் நீ..கண்ட கனவும் ஒன்றானது. எது என்கின்றாய் இதுதான் .












6-கண்ட கனவில் நமது உள்ளம் எத்தனை ஆனந்தம் அடைந்து துள்ளி குதித்து மகிழ்தோம் இன்றைய நாள் போல் என்றம் நம் வசமாய் இருக்க வேண்டும் என்று வள்ளவன் வாசுகிபோல் நாம் வாழ்வோம் என்று கை கோர்த்து பாடிய பாடல் இது.









7-இருந்தும் மனது ஒரு சோகமாய் இருந்தது இருவரும் சேராமலே நினைவுகளால் இசையால் மட்டும் இப்படி சந்தோசமாய் இருக்கின்றோம் சேரும் காலம் வரமா..? என்று காலத்தை தினம் தினம் கேட்டுக்கொள்வேன் என்னை பிரிந்து விடாதே என்று நான் கேட்ட போது நீ..எத்தனை ஆறுதல் சொன்னாய் எனக்கு. ஒவ்வொரு சொற்களில் உன்னிடம் என்னை கனிய வைத்தாய்.நீ சொன்னாலும் காதல் பிரிந்தால் வேதனைதானே..?பயத்தில் நான் இப்படி பாடினேன் உன் காலடியில்.












8-பாடி பாடி வானம் முழுதும் தேவதை போல் அங்கும் இங்கும்மாய் வருவாயா? வந்து என்னை கனிவான மொழியால் பேசி என்னை அழைத்தசெல்வாயா..? என்று அழைந்து திரிகின்றேன் புவி மீது .நிறைவேறுமா..?என்று.









9-இருந்தும் நம்பிக்கையோடு காத்திருக்கேன் வருவாய் என்று வந்து உன் கரங்களால் என்னை தாங்குவாய் என்று. உனது வார்த்தை தான் என்னை வாழவைக்கும் பூவுக்கு நறுமணம் தான் அழகை கொடுப்பது எனக்கு நீ..தான் நிம்மதி என்ற அழகை கொடுப்பது என்னை ஏமாற்றுவது என்ற என்னத்தை விட்டுவிடு.









10-நான் சொல்வதை கூட காதில் விழுத்தாமல் என்னை கள்ளி என்று குறும்புசெய்யாதே.. கொஞ்சி பேசினால் போதுமா..? காதல் உள்ளம் கொண்ட நீயும் கள்ளன்தான்.









11-இசையில் நானும் நீயும் உயிர் கலந்தாலும் இருவரும் ஒருவரை ஒருவர் இப்படி பாடிக்கொண்டு இருந்தால் போதுமா..? என்னை ரசித்தது போதும் என் உணர்வகளை புரிந்து கொள் பாடுவதை நிறுத்து என்றால் கேட்காமல் இப்படி பாடுகின்றாயே என்னை என் வார்த்தைகளை புரிந்து கொள்ளடா.









12-நான் கேட்ட போதுதான் உன் உள்ளத்தை அறிந்தேன் உன் என்னத்தை அறிந்தேன் உனக்குள்ளம் இத்தனை ஆசைகள் உண்டா என்று. உன் செல்ல குரலில் என்னை என்னை குட்டி என்ற அழைத்தாய்.இப்படி.









13-என்னை குட்டி என அழைத்த போது நான் எனக்கு மட்டும் தான் என் செல்லம் என அழைத்தேன்.அப்போதுதான் என்னை அன்பாக பார்த்துக்கொள்ள ஒரு உறவு வந்து விட்டது என சந்தோசத்தில் மிதந்தேன்மனதில் பொன் ஊஞ்சலை கட்டி ஆடினேன்.






14-இது பொய் ஊஞ்சல் என்று காலம் கடந்துதான் கண்டேன். என் உணர்வுகள் என்காதல் என் ஆசைகள் எல்லாம் கட்டிய ஊஞ்சல் கயிறு அறுந்து போதுதான் என் இதயம் தூளாகிப்போனது.உன்னிடம் நான் கேள்வி கேட்டாலும் பதில் கிடைக்காது என்று தெரிந்தும் இறுதியாக கேட்கின்றேன்.









15-அனால் அவன் மனதில் அவள் மட்டுமே அவள் வேறு யாரும் இல்லை அவன் மனவி மட்டுமே..என்பதை காலம் கடந்துதான் அவள்கேள்விக்கு விடைகிடைத்தது. பொய்யான பிறேமையயை கண்டு ஒடிந்து ஓரமாய் அவள் மறைந்து கொண்டாள் அவன் மனதில் என்றும் இந்தப்பாடலில் வரும் இவள் தான் வாழ்கின்றாள் என்று ஒவ்வொரு நிகழ்வுகளிலும் புரிந்து கொண்டாள் குழந்தை மனம் கொண்ட இவள் எத்தனைகாலம்தான் ஏமாறுவாள்.









16-அவன் சந்தோசங்களுக்காகஎல்லாவற்றையும் தியாகம் செய்து கொடுத்துவிட்டு ஓரமாய் ஒதுங்கி வாழ்கின்றாள் ஒவ்வொரு நினைவுகளும் ஒவ்வொரு ஏக்கங்களும் எல்லா உணர்வுகளையும் ஆசையில் கட்டிய அத்தனை கலந்து உரையாடிய வசந்தங்களையும் சொல்லியும் எனி எந்த விடையும் கிடைக்கபோவதில்லை என்று தெரிந்து விடை பெற்று துங்கிவிட்டாள்.



http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=29977
அன்று நான் மட்டமே உன்னை சுற்றி வர என்னை நேசித்தாய் இப்போ எல்லோரும் உன்னை சுற்றி இருப்பதால்என்னை மறந்து விட்டாய் மதிக்க தவறி விட்டாய் காத்திருக்க தவறி விட்டாய் காவியத்தில் எழுதும் நேரம்காதலையே மறந்துவிட்டாய். வாழ்க வளமுடன் .
காதல் காதல் இருவரும் உணவுகளை உரிமைகளை விட்டுக்கொடுக்காத காதலாய் காதலுக்காக எதையும் செய்ய துணிவு இருந்தாள் மட்டுமே காதல் செய்யங்கள் தயவு செய்து.
அன்புடன்.ராகினி.
--------------------------
உங்கள் காதல் நிறை வேறி விட்டதா..? அப்போ இதை கேளுங்கள்.
http://www.raaga.com/playerV31/index.asp?pick=40031&mode=3&rand=0.31549816906303174&bhcp=1

Friday, March 30, 2007

கனவுகள் சிதைந்தன

எனக்குப் பிடித்த பழைய பாடல்களை எனது கவிதைகளுடன் கேட்க கீழ்வரும் இணைப்புகளை அழுத்துங்கள்... [NEW]

என்றும் இனியவை-1

என்றும் இனியவை-2

இசையும் கதை கவிதைகள் சிறுகதை என் குரலில் கேட்க இங்கே.அழுத்தவும்

http://clearblogs.com/piriyaa/






கனவுகள் சிதைந்தன.


சரவனன் வேப்பமரத்தின் கீழ் இருந்த நாற்காலியில் மெல்லென சாய்ந்தபடி.. தெண்றலை சுவாசித்துக்கொண்டு இருந்தான்..


மனைவி..விசாலி.என்ன..வேப்பமரத்தடிக்கு போய்விட்டீர்களா..என்றாள் சாப்பாடு முடிந்ததும் உடனே.. நிழலைத்தேடி போடுவார்.


என புலம்பியபடி..தண்ணீரைக்கொண்டுபோய் கொடுத்தாள்..என்னடி என்தநேரமும் புறுபுறுத்தபடி..என்ன வேணும் உனக்கு இல்லை.

சாப்பிட்டகையுடன் மரத்தின் கீழ்வந்து உற்கார்ந்தால் சாப்பிட்டஉணவு செமிக்கவேண்டாமே...கொஞ்சநேரம் நடந்தால்தானே..நல்லது.ம்..ம்..இன்று ஒருநாள்தான் லீவு மற்றய நாள் முழுதும் வேலை தானே.. என்றான் ..சரவனன் சரி..சரி..இந்தாங்கோ.. தண்ணீரை குடித்து விட்டு இருங்கள் எனக்கு வோலை இருக்கின்றது நான் போறோன் என கூறிய படி அவள் செல்ல..சரவனன்உனக்கு நெடுக வேலை நீயும் கொன்சநேரம் இதிலை இருநல்ல காத்து வீசுது என்றார்.


சரவணன்இல்லை இல்லை தம்பி வரும் நேரம் அவனுக்கு சாப்பாடு எடுத்து வைக்க வேணும் சாப்பாடு போடுவதற்குள் கத்துவான் பசிக்குது என்று.

பிள்ளை பாவம் அவனும் நம்முடன் இருக்கும்வரைதானே...நாமும் கவனிக்க முடியும்அவனுக்கும் நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்தால் நாமும் பேரப்பிள்ளைகளுடன் பொழுது போகும் என்றாள் விசாலி.சரவணன்முதல் மகளுக்கு திருமணம் முடியட்டும் விசாலி.

அதன் பின் அவன் திருமணத்தைபற்றி யோசிப்போம் அவனின் சம்பளத்தில்தானே..நம் வாழ்க்கை ஓடுகின்றது..என் சம்பளம் மட்டும் போதுமா..நான் உளைத்து என் மருந்து செலவுக்கே.. போதாது..நெஞ்சு வலி எப்ப படுக்கையில் போடுமோ..தெரியாது. என்றான்.

விசாலி..

அவள் படிப்பு படிப்பு என்று திரிகின்றாள் படிப்பு முடிய என்னும் இண்டு வருடம் இருக்கின்றது அதற்கிடையில் அவனுக்கு திருமணம் முடித்தால் நல்லது.எனி உங்கள் விருப்பம்.

என்றபடி எழுந்து வீட்டுக்குள் சென்றாள்.மகன் சுதா.. வேலை முடிந்து வந்தான்அம்மா..என அழைத்தபடி..வீட்டுக்குள் நுழைந்தன்.

விசாலி.. ராசா வந்தாச்சா..சரி கை கால் கழுவி விட்டு வா..சாப்பிட என அழைத்தாள் சுதா..அம்மா..தங்கை சாப்பிட வந்து விட்டாளா....ஓம்...ராசா.. சாப்பிட்டுபடிக்க போய்விட்டாள் என்றாள்..சுதாவும் சாப்பாட்டை முடித்து விட்டு.

அருகில் இருக்கும் பார்க்குக்கு நடந்து சென்றான்.

அவனுக்கு பூக்களை ரசிப்பதில் ஆர்வம் உடையவன் அழகிய பூங்காவனத்தை சுற்றிவருவான் சற்றி வரும்பொழுது மலரின் நடுவில் கருவிழி அவன் கண்னைப்பறித்தது.
பூக்களை அகற்றி பார்வையிட்டான் யார் இவள் மெய்சிலிர்க்க வைக்கின்றாளே..இவளை இதுவரை இங்கு பார்த்ததும் இல்லை யாரோ..நீ.. என.. சிந்தித்தான் சுதா.


படம் சுள்ளான்
பாடல் யாரோ நீ.. பிஞ்சுநிலவா....

அவன்..மனது அலைமோதிக்கொண்டது.

பிரியா.. தன் குடும்பத்துடன் பார்க்குவந்திருந்தாள்.
தன் தங்கையுடன் பூங்காவனத்தை சுற்றிப்பார்து முடித்துவிட்டு தாயிடம்வந்தாள்.

என்ன பிரியா.வீட்டுக்கு போவோமா....? என..அழைத்தார் அவள் மாமா..சுதா...ஓ...உன் பெயர் பிரியாவா.. ம்.. உன்னைப்போல் அழகிய பெயர் என என்னிக்கொண்டான்அவளும் சரி எனக் கூறி எல்லோரும் புறப்பட்டார்கள்.சுதாவுக்கு ஏமாற்றம் விசாரிப்பதற்க்குள் போய் விட்டார்கள் என்ற ஏமாற்றம்.
அவனும் வீட்டுக்கு செல்கின்றான் அவள் நினைவுகளை தன்னுடன் எடுத்துக்கொண்டு.

இவள் எனக்காக படைக்கப்பட்டவள் இவள் தான் என் வாழ்க்கை துணையாக வேண்டும்.
இவள் இல்லையெனில் எனக்கு வாழ்க்கை இல்லை இவளை நான் அடைய வேண்டும்.
அப்போதுதான் என்வாழ்வில் வசந்தம் ஏற்படும். என்ற படி வீட்டுக்குள் நுழைந்து தன் கட்டிலில் அமர்ந்தான் அம்மாவிடம் சொல்லவேணும் எப்படி ஆரம்பிப்பது.
இருக்கட்டும் மீண்டும் இளை சந்தித்த பின் அம்மாவிடம்கூறுவோம் என..சற்று சரிந்தான் உறக்கம் கொள்ள சுதா..அவனுக்கு உறக்கம் வர மறுக்கின்றது அவள் முகம் அவனை வாட்டியது.

தாய் கதவை தட்டி..தம்பி.தம்பிசுதா..இந்தாடா..தேனீர் கதவை திற தம்பி..என மீண்டும்மீண்டுமாக தட்டினாள் விசாலி.

அவனுக்கு கதவின் சத்தம் கூட காதில் கனவாக கேட்டது.தாய் மீண்டும் தட்டுகின்றாள்..ராசா தம்பி எத்தனை தடவை கதவை தட்டினாலும் திறக்கின்றாய் இல்லையே..சுதா..சுதா.. ..என கூப்பிட அவன் திடுக்கிட்டபடி..அம்மா..என கூப்பிட்ட வாறு கதவை திறந்தான் என்னடா..எத்தனை தடவை கதவை தட்டுகின்றது என கேட்டவாறு தேனீரை கொடுத்து விட்டு திரும்பினாள்விசாலி..

இன்று இவனுக்கு என்ன நடந்தது தினமும் வேலையால் வந்தவுடன் பார்க்குக்கு..போய் வந்த எங்களுடன் சிரித்து கதைத்துவிட்டத்தான் தன் றூமுக்குள் நுலைவான்..இன்று போய் வந்ததும் கதவை பூட்டி விட்டு உறங்கு கின்றான் ம்..என்ன அவனுக்கு வேலைக்கலையாக இருக்கும் பாவம் உறங்கட்டும் பிள்ளை.

என கூறிக்கொண்டுசரவணனுக்கு தேனீர் எடுத்துக்கொண்டு சென்றாள் விசாலி.

சரவணன். என்ன செய்கின்றான் சுதா எனக்கேட்கவிசாலி.

அவன் உறங்குகின்றான் என்ன இன்று கதைக்ககூட இல்லை ஏன் என்னவாம்..என தேனீரை அருந்திக்கொண்டு சரவணன் கேட்கவிசாலி என்னமோ..இன்று பிள்ளையின் முகத்தில் ஒருமாற்றம் தெரியுது ஒரு வேளை வேலை கூடவோ தெரியவில்லை..என்றாள்.

அவனை கூப்பிடப்பா..என்ன என்று கேட்பதில்லையா.?

சுகமில்லையோ..தெரியாது போய் பாரும் போம். விசாலி மகனை அழைத்தாள்.சுதா...சுதா..இங்கே..வா..அப்பா வரட்டுமாம்வா..ராசா.வா..என அழைக்க.சுதா..என்னம்மா..என்ன..உன்னை அப்பா வரட்டுமாம்அப்பா.. என்ன சொல்லுங்கள் எனக்கேட்க.ஏன்டா.. என்ன இன்று அப்பாவுடனும் கதைக்காமல் என்ன தூக்கம் என்ன ஆச்சு உனக்கு.ஒன்று இல்லை அப்பா லேசான தலைவலி சரி யாகி விடும் எனக்கூறிக்கொண்டே மீண்டும் தன் படுக்கையறைக்குச் சென்று உறங்க முயற்சி செய்தான் அவனால் முடியவில்லை அவள் முகம் அவனை வருடியது.அவன் தன் நிலையை சிந்திக்கின்றான்.

தன் குடும்பப்பொறுப்பை சுமந்து வரும் இவன் தன் திருமணத்தை நினைக்க அவனால் முடியவில்லை..இருந்தும் இதயத்தில் தீடீரென ஏற்பட்ட மாற்றம் அவனை திக்கித்தினற வைத்தது. தன் தேடலா..இல்லை.. குடும்பச்சுமையா..கேள்வி..ஏழுகின்றது அவன் மனதில்..

படம் ரட்சகன்.
கனவா..இல்லை காற்றா..

அதிகாலையும் ஆகிவிட்டது அவன் மறுபடியும் வேலைக்கு புறப்படுகின்றான்..விசாலி... தம்ப பணம் இருந்தா..கொடு அப்பாக்கு மருந்து வாங்கவோணும் எனக் கேட்க அவனும் பணத்தை கொடுத்து விட்டுபுறப்படுகின்றான்.

அங்கும் அவனால் வேலை செய்ய முடியவில்லை.அவளை இன்றும் பார்க்கில் காணமுடியுமா..அவள் எனக்கு கிடைத்தவரம் அவளின்றி எனி எவளுக்கும் என் இதயத்தில் இடம் கொடுக்க முடியாது.

பிரியா..நீ..இல்லாத வாழ்க்கையை என்னால் கற்பனை பண்ணமுடியாது நீ..கனவாக முடிந்து விடாதே என் வாழ்வில் மனவியாக நீ..வரவேண்டும். என் இதயத்தில் முதல் இடம்பிடித்தவள் நீ...உன்னை சந்தித்தபின்புதான் நான் காதலை உணர்ந்தேன்.

பிரியா..நீ..எனக்குத்தான் கிடைக்கவேணும்அமைதியாக இருந்த எனை அலைமோதவைத்துவிட்டாய்இன்று நான் உனை பார்வையிட வேண்டும்வந்துவிடு பிரியா.. வந்துவிடு அவன் தவிப்பு ஏக்கம் துடிப்பு எல்லாம் அவளையே..சுற்றியது.

அவன் மனது
வேலை முடிந்ததும் அவன் அவசர அவசரமாக.வீட்டுக்கு வந்து தன்னை அழகு படித்திக்கொண்டு உடனே.

பார்க்குக்கு புறப்படுகின்றான் சுதா..தம்பி சாப்பாடு போடவா..என விசாலியின் குரல் இல்லை நான் வந்து சாப்பிடுகின்றேன்.

அதுசரி..எங்கோ அப்பா..?எனக்கேட்டவாறு வெளியே..வந்தான் சுதா.அவர் வெளியே போறேன் என்று சொல்லி விட்டு போனார் என்னும் வரவில்லை தம்பி..என்றாள் விசாலி.நீ..என்ன அவசரத்தில் நிக்கின்றாய் சாப்பிடவும் இல்லை.இல்லை அம்மா..சதீஸ்சுடன் அவசரமாக வெளியே போய் வருகின்றேன் வந்து சாப்பிடுகின்றேன் என கூறிவிட்டு அவளை காண ஆவலுடன் புறப்பட்டார்கள் இருவரும்.

அங்கே..இருவரும் தரையில் உற்காந்து கொண்டுபேசிக்கொள்கின்றார்கள்.என்ன சுதா..என்னும் வரவில்லை..உன் பிரியா..எனக்கேட்டான் சதீஸ்இன்று..வருவாள் கெஞ்சநேரம் பார்ப்போம் பொறடா எப்பவும் உனக்கு அவசரம்தான் ம்..சரி. சரியாடா.. அவளைப்பற்றிய விபரம் தெரியாமல்நீ...சும்மா..காதல் காதல் என்று திரியாமல் அமைதியா இருடாசுதா..உன்னை நம்பி உன் குடும்பம் உன் அப்பா..வேறுநெஞ்சுவலியால் துடிக்கின்றார் அதோடும் சின்னவேலை செய்கின்றார் நீ..பாவம் என்று. சிந்தியடா.. சுதா..என்னமோ.நீ..முடிவெடுத்தால் மாறமாட்டாய் சரி வரட்டும் பார்ப்போம் அவளை.என்றான் சதீஸ்.


தெரியுமடா..எனக்கு தெரியும். அதற்காக நான் காதலிப்பது தவறா..திருமணம் செய்துவிட்டும் அவர்களைப்பார்க்கலாம்தனே... எனக்கு முதல் அம்மா அப்பா தங்கை அதன் பின்புதான் எனக்கு அவள் மனவி.அதில் எந்தமாற்றமும் இல்லை.

இருந்தும் அவளை நேற்ருப் பார்த்ததில் இருந்துஎன்னால் அவளை விட முடியவில்லை நான்இன்று அவளிடம் கதைக்க ஆரம்பிப்பதாக இருக்கின்றேன் என சொல்லிய படி தலையை நிமிர்தினான் சுதா..அவள் வரவு அவன் கண்ணில்...ஒளிவீசியது


படம்...அயோத்தியா.
பாடல்... சிவகாசித்தீ....விழிகள்டேய்..
சதீஸ்..டேய் அங்கே..பாறடா..தன் குடும்பத்துடன் வருகின்றாள் பார் எனக் கூறினான் சுதா.அவனும் பார்த்துக்கொண்டோ..என்னடா...இருவார் வருகின்றார்கள் இதில் யார் பிரியா. எனக் கேட்டான் சதீஸ். அந்த குங்குமக்கலரில் வரும் என் குங்கமநாயகி..என்றான்.சுதா..மறுபுறம் இருந்ததந்தை சரவணனும் பார்வையிட்டார். அவளைஓ….இதுதான் உன் தலைவலிக்கு காரணமா ?
யார் என விசாரித்து முடித்துவிடுகின்றேன் எனமனதுக்கு நினைத்துக்கொண்டு அமைதியாக இருந்தார்சரவணன்.சதீஸ்..ம்....இந்தஅழகில் விழுந்து மூழ்கிவிட்டாய் எனி..உன்னை எழுப்புவதெண்றால் பிரியாதான் வர வேண்டும்எனக்கேலிசெய்தான்.ஆமாம் எனக்கு அவள் இல்லை என்றாள் என் திருமணம் இந்த ஜென்மத்தில் இல்லை..என கூறினான்.சரிடா..சரிடா. இன்று கதைக்கஆரம்பி பின்புஉன் காதலை கூறு என்றான்.சதீஸ்பிரியாவும் பார்க்குக்குள் வந்து தன் தங்கையுடன் மீண்டும்அழகிய பூக்களை ரசித்துக்கொண்டு நடந்தாள்.சுதா...வின் பார்வை அவளை மட்டுமே..பார்வையிட்டதுஅவளின் தந்தை பிரியா..கவனம் கெதியில் வரவும்எனக்கூறிக்கொண்டு பச்சைப்புல்லின்மேல் உற்காந்தார்.அங்கே...பிரியாவின் தந்தை கணேஸ் தன் நண்பனை சந்திக்கின்றார்.சுரேன்.


என்ன கணேஸ் இரண்டு வருடத்தின் பின்பு மீண்டும் உங்கள் தங்கையை காண வந்திருக்கின்றீர்களா?ம்.ம். தங்கையை பார்க்கவேணும் போல் இருந்தது அதுதான் வந்தோம் நாளை புறப்படுகின்றோம் என்றார் இதைக்கேட்டதும் சுதா..துடித்தான்..டேய்....டேய்..சதீஸ்...என்னடா. இப்படியொரு தண்டனைஇவள் யாரடா....என்னை வதைப்பதற்கு என்று வந்த தேவதையா...? இவள் என் கண்ணில் பார்வையிட மட்டும் வந்தாலா..?இல்லை ..என்ன நடந்தாலும் பறவாய் இல்லை வா...உடனே..என் காதலை சொல்வதுதான் சரி.அவள் எனக்கு மட்டும் தான் எழும்படா..... எழும்பு..என சதீஸ்சின் கையை பிடித்து இழுத்தான் இருவரும் எழுந்து நடக்க ஆரம்பித்தார்கள் சுரேன் கணேசின் இருவரின் உரையாடலை கேட்டுக்கொண்டு அவளை நோக்கி நடந்தார்கள் சுதாவும் சதீஸ்சும்

அதுசரி. கணேஸ்..பிரியாவுக்கு என்னும் திருமணம் செய்ய சிந்திக்கவில்லையா?இல்லை படிப்பு அது இது என்று சொல்கின்றாளா..?இல்லை சுரேன் அவள் வாறமாதம் அமெரிக்கா..புறப்படுகின்றாள் அவளுக்கு தங்கையின் மகனை பேசி முடித்துவிட்டோம் இதுவிடயமாகத்தான் இப்போ..வந்தோம் நாளை புறப்படுகின்றோம் என்றார்.

பிரியாவின் தந்தை.இதைக்கேட்ட சுதா.. சதீஸ்..இது பொய்தானே..இல்லை நீ...கேட்டாயா..அவர்கள் சொன்னதை இவளை நான் இழக்கமாட்டேன் என சுதா..புலம்பியதை கேட்டார் சரவணன் கடவுளே..என்றவாறு நெஞ்சுவலியால் சரிந்து விட்டார் சரவணன்.டேய் சுதா..அமைதியாக இரு இதற்குத்தான் சொன்னான் விசாரிக்காமல் முடிவெடுக்காதே..என. நீ..கேட்கவில்லை அமைதியா..இருடா..எனக்கத்தினான் சதீஸ்இல்லை..அவள் தான் என் மனைவி..அவள் என் மனைவி என புலம்பினான் சதீஸ்சால் அவனை சமாதனப்படுத்த முடியவில்லை.சுதா..தன் நிலை மறந்தான் அவளை மறக்கமுடியாமல் தவித்தான் துடித்தான். நான் உன்னை என்னும் காதலிப்பேன் உன் நினைவுகள் போதும்டி பிரியா.. போதும். எனக்கு.

ஓ.....பிரியா..பிரியா..என் பிரியா..பிரியா..
---------------


இருவரும் உயிரைக்கொடுத்து காதல் செய்தால் தான் காதல் ஜெயிக்கும்.இல்லை..இல்லை மரணம் வரை கண்ணீர்தான்.

நன்றியுடன்
ராகினி.
ஜேர்மனி.







Monday, June 05, 2006

கல்லறைப் பூக்கள்



கல்லறைப் பூக்கள்

ராணியின் சிந்தனைகள் மெல்லென சிறகுகள் விரிக்கத் தொடங்கின....

மனிதர்களின் கோலங்கள் அவள் முன் மின்மினிப் பூச்சிகள் போல் வந்து வந்து மறைந்தன. அவளை கொஞ்சம் கொஞ்சமாக வதக்கி பிழிய ஆரம்பித்தது. உண்மைதான் உலகம் ஒரு ஆட்டிப் படைக்கும் விஷக் கிருமியாச்சே.என்னவென்று சொல்வது? எதை சொல்வது? அவள் மனம் போடத் தொடங்கியது. போதுமா.. இல்லை விடைபெறுவோமா..
அவள் மனதில் இருந்த கனவுகள் எல்லாம் மறைந்து போனது இல்லை…மனிதர்களால் கசக்கப்பட்டது உண்மை எது பொய் எது என சிந்திக்க மறுக்கும் உலகில் இருந்து வாழ்க்கைப் பயணத்தை தொடர தடுமாறினாள். காரணம் வாழ்க்கையும் அவள் நட்பை உணர மறுத்து விட்டது. விடை கேட்டாலும் விடைதான் கிடைத்து விடுமோ..? புரியவில்லை அவள் மனது
மனிதர்களின் மனதுக்குள் இத்தனை அகிம்சையா..வாழ்க்கையின் விழும்பில் நின்று விம்மி விம்மி அழுகின்றாள். சிந்தனைகளை சிதறடித்து வார்த்தைகளை சிதற விடும் மனிதர்களே…ஏன் சிந்திக்க மறுக்கின்றார்கள்? சிந்திக்கின்றாள் ராணி.
இவர்கள் மனிதர்களா..?
இல்லை நடமாடும் பிணங்களா..?
அவள் சொல்லி அழவும் யாரும் இல்லை..சொல்லவும் வழி இல்லை..புலம்புகின்றாள்.
அகிம்சையாக்கிய உலகிற்க்கு முற்றுப் புள்ளி வைக்கின்றாள்.
உண்மையை உணரமுடியாத மனிதர்களிடம் போராடுவதை விட தன்நம்பிக்கை என்ற பயணத்தை ஆரம்பித்தாள். நட்புக்கு உரம் கொடுத்தாள் அழிக்க முடியாத படி வரம் கொடுத்தாள். மூடர்களின் கதை கேட்டு அவள் முடங்கி விடவில்லை. தன்நம்பிக்கையான ஆழத்தை வெளிப்படுத்தினாள்.வாழ்க்கையின் விழும்பில் இருந்துவாழ்க்கைக்கு செல்கின்றாள் ராணி.
ஒவ்வொரு வினாடியும் தன் நட்புக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தாள்.சமுதாயம் தூற்றினாலும் தன் நட்பில் நம்பிக்கை வளர்க்கின்றாள்.உண்மையை கற்றுக் கொள்ளாத மனிதர்களிடம் இருந்து மெல்லென நகர்ந் தாள். அவர்களின் வார்த்தைகள்தான் அவளின் நட்புக்கு உரமானது.
சமுதாயத்தின் வார்த்தைகள் தடுமாறிய போதும் தன் வாழ்க்கையை தடுமாற்றம் இல்லாமல் பாதுகாத்தாள்.
அவர்கள் மனது சிந்திக்க மறுத்து வீசிய வார்த்தைகளை ஆழமாகப் பதித்தாஅவளுக்குள்ளே புழுங்கிக் கொண்டாள்.
தொலை பேசியில் கேலி செய்த வார்தைகள் உணர்வற்ற மனிதர்களின் பரீட்சைஅவள் வாழ்க்கைக்கு விஷப் பரீட்சையானது…சுகமான நட்பை இதயத்தில் சுமந்து கொண்டு இதில் இருந்து மீள்வதற்காக தன் சினேகிதி வீட்டுக்கு ஒரு மாத லீவில் பயணமாகின்றாள் ராணி.
நூல்வேலி…
மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே.............
காலை ஆறு மணிக்கு அவள் பயணம் ஆரம்பமாகின்றது…
ஸ்சில் தன் பக்கம் இருந்த கண்ணாடியை மெதுவாக இறக்கி விட்டுபசுமைகள் நிறைந்த பாதைகளை ரசித்துக் கொண்டு செல்கின்றாள்.
ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு பசுமை நினைவுகள் அவள்மனதை வருடிச் செல்கின்றது.
அவள் சோகத்தைமறக்கச் செய்தது. அந்த பயணமும் பசுமையும்…அவள் இறங்கும் இடம் வர தன் சுமைகளையும் பஸ்சில் இறக்கி விட்டு இறங்கி தன் சினேகிதி வீட்டுக்குள் புகுந்து கொள்கின்றாள்…ராணி.
நித்தியாவின் தாய்
பவானி….வாம்மா....ராணி…...உனக்காகத்தான் வாசலில் காத்து நின்றேன்.
பயணம் நன்றாக இருந்ததா?…என பவானி கேட்கராணி…ஆம் அன்ரி சந்தோசமாக இருந்தது.
ஒவ்வெரு கிராமங்களைரசித்து வரும்போது தூரம் தெரியவில்லை..என்றாள்.
அப்படியா…சரி போய் குழித்து விட்டு வாம்மா.. சாப்பிட என்றாள் பவானி.இல்லை அன்ரி நித்தியா வரட்டும் சேர்ந்து சாப்பிடலாம் என்றாள் ராணி.
நித்தியா..வர என்னும் மூன்று மணி நேரமாகும். நீ…பிள்ளை சாப்பிட்டுஅவள் றூமில் போய் ஓய்வெடு.
அவள் வந்ததும் இருவரும் சேர்ந்துகதைக்கலாம் என்றாள் பவானிராணியும் சரி அன்ரி குழித்து விட்டு வருகின்றேன் என்றாள். பவானி சாப்பாடு ரெடி செய்ய, ராணியும் குழித்து விட்டு வந்து சாப்பிட்டாள். பவானி நித்தியா வின் றூமைக் காட்டினாள்.
ராணியும் அவள் றூமுக்குச் சென்றாள்.
அவள் தனிமையில் இருக்க அவளை மீண்டும் சமுதாயத்தின் சீர்கேடு ஞாபகப் படுத்த அவள் கண்ணில் இருந்து கண்ணீர் பெருகியது.
அவள் சமாதானத்துடன் எழுந்து நித்தியாவின் றூம் யன்னலை திறந்து மாலைப் பொழுதின் இதமான காற்றை சுவாசித்துக் கொண்டு அங்கும் இங்கமாக பார்த்தாள்.மலைகளும் பசுமைகளுமாகக் காட்சி கொடுத்தது.
அந்த அழகிய கிராமம் மெல்லிய பனித் துளிகள் இலைகளில் இருந்து விழ அதை கையால் ஏந்திக் கொண்டு இருக்க....
ஒரு குரல் அவளை அழைக்கின்றது
இனிமையான குரல் அவள் இதயத்தில் அவளுக்கும் தெரியாமல் புகுந்து கொள்கின்றது…ஒருகனம் அப்படியே தன் நிலை மறந்து பாடலை ரசிக்கின்றாள் ராணி..
நிலாவே. வா..
மலையோரம் வீசும் காற்று மனதோடு பாடும் பாட்டு...............
அந்தப் பாடலை அவளாள் விடமுடியவில்லை…
எங்கேயோ.. நீ….இருந்து என் மீது போர் தொடுக்க கொல்லாதே...பாவம் இந்தஜீவன்தான்..........
அந்தவரிகளை… மீண்டும் மீண்டும் பாடுகின்றாள் மனதுக்குள்.
யார் என விழிகள் தேட ஆரம்பித்தன..
அவள் நினைவுகளுடன் இருக்க..நித்தியா…றூமுக்குள் புகுந்து கொள்கின்றாள்.
ஏய்……எப்படியடி இருக்கின்றாய் உனை பார்த்து எத்தனை வருடம் ஆகி விட்டது?
இப்பத்தான் வந்திருக்கின்றாய் என அவளை கட்டி அணைத்து கத்தினாள்.
இருவரும் சந்தோசமாக பேசிக்கொண்டார்கள்.
பவானி..நித்தியா சாப்பிட்டு ஆறுதலாக கதையுங்கள் இருவரும்.என தாய் கூப்பிட நித்தியா….சரி அம்மா என பதில் கொடுத்தாள்.
நித்தியா….ராணி நான் லீவு எடுத்துள்ளேன் நாளை இந்த அழகிய கிராமத்தை சுற்றிப் பார்க்கலாம் என…கூறிய படி உறங்கி விட்டார்கள்.
மறுநாள் காலை இருவரும் கிராமத்தை சுற்றிப் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்து மீண்டும் யன்னல் ஓரமாக நிற்க்கின்றாள்..அதே…குரல்.....அவள் காதில் அவளாள் மறக்க முடியவில்லை..நித்தியாவை கேட்கின்றாள்…ராணி....யாருடைய குரல்? யார் பாடுவது? எனகேட்க.நித்தியா….
ஓ…இதுவா…?
அது பக்கத்து வீட்டில் சீடியில் போகுதடி அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.
இருந்தும் அந்தக் குரலுக்கு சொந்தமானவரைக் கண்டு பிடிக்க முடிவெடுத்தாள் ராணி...நித்தியாவிடம் கேட்டாள்.
நான் போவதற்க்குள் இந்தக் குரலுக்குரியவரை பார்க்க வேண்டும் என கேட்டாள்.
நித்தியா…பார்க்கலாம் தொலை பேசி இலக்கம் வாங்கித் தருகின்றேன் என்றாள்.
நித்தியாவும் பல இடங்களில் விசாரித்து தொலை பேசி இலக்கத்தைபெற்ரு அவள் கையில் ஒப்படைக்கின்றாள்.
ராணியும் ஆனந்தத்துடன் அதை வாங்கினாள்.இருந்தும் அவள் மனது தடுமாறியது.
எப்படி ஆரம்பிப்பது?
என சிந்தித்தாள்.
இரு நாட்களுக்கு பின் அந்த இலக்கத்தை தொலைபேசியில் சுழட்டுகின்றாள்.
ஹலோ…ஹலோ…என அழைக்க ஹரி…யார் நீங்கள் என கேட்டுக் கொண்டான்.நான்…நான்….உங்கள் ரசிகை என பதில் கொடுத்தாள் ராணி.
ரசிகையா…?
எனக்கு பல ரசிகர்கள் இருக்கின்றார்கள்நீங்கள் யார் என்று சொல்லவில்லையே..?
என்றான் ஹரி.
நான் இரு வாரமாகத்தான் உங்கள் பாடல்கள் கேட்டேன்.

எனக்கு உங்கள் இனிமையான பாடல்கள்.

என் இதயத்தில் பதிந்து விட்டன.

உங்கள் குரலையும் நான் நேசிக்கின்றேன் என்றாள்.

உங்கள் பாடல்கள் வெளியான சீடி.யும் சேகரித்துக் கொண்டு இருக்கின்றேன் என்றாள்.ஹரியின் மனது சிந்திக்க ஆரம்பித்தது.

என்ன…இவள் வித்தியாசமான ரசிகையாக இருக்கின்றாள்.
கேட்பவர்கள் ஒரு விதம் ரசிப்பவர்கள் ஒருவிதம்.

இவள் இரண்டையும் தாண்டிய இன்னொரு ரகமா..?

அவன் மனதில் கணப் பொழுதில் பதிந்து விட்டாள் ராணி..

தொலைபேசி அழைப்பு இருவருக்கும் இடை வெளி இல்லாமல் தொடர்ந்து செல்லும் போது..இருவரும் ஒருவரை ஒருவராக காதலில் சிக்கித் தவித்தார்கள்

அவளின் லீவும் முடிவு பெற மூன்று நாட்கள்தான் உள்ளது.

ஹரிக்கும் இவள் பிரிவு வேதனையாக்கியது…காதல் பரிசொன்றை தபாலில் அனுப்பினான்.

அவன் ஒரு பாடகன் என்பதை அந்தப் பரிசு உணர்த என்னும் அவள் நேசிக்கத் தொடங்கினாள்…அவள் வீட்டுக்கு புறப்பட தயாராகும் போது அவனின் காதல் பரிசை கையில் எடுத்து தன் பாதங்களில் கட்டினாள்.

அவள் நடக்கும் போதெல்லாம் அந்தக் கொலுசின் ஓசை அவனின் உயிர் ஓசையாக ரசித்தாள்.

தன் தோழியிடம் இருந்து விடை பெற்ருக் கொண்டு பஸ்சில் ஏறி இருக்கையில் இருந்து கொண்டு தன் கொலுசை தட்டி சத்தத்தை ரசிக்கத் தொடங்கும்போது..பஸ்சில் அவன் பாடிய பாடல் அவள்

காதினில் ஒலிக்கின்றது

காதல்ஓவியம்....

வெள்ளிச் சலங்கைகள்........................

பாடலை ரசித்து விட்டு பயணத்தின் பாதையில்அவள் தன் ஹரிக்கு கடிதம் எழுதினாள்.

தன் உணர்வுகளை கடித மூலம் எழுதுகின்றாள்.அன்பான ஹரி…என் பயணம் சந்தோசமாக கழிந்து கொண்டு இருக்கின்றது. பயணத்தின் பாதையில் இம்மடலை எழுதுகின்றேன்.

ஹரி…உங்கள் முகத்தை நான் பார்க்கவில்லை.இருவரும் புகைப்படத்தைத்தான் பரிமாறிக் கொண்டோம். உங்கள் கொலுசுதான் என் காதலுக்கு அத்திவாரம்.

உங்கள் தாலிக்கும், பொட்டுக்கும் நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கின்றேன்.

பெற்றேரிடம் கதைத்து உங்களுக்கு கடிதம் நல்ல செய்திகளுடன் போடுவேன்.

அதுவரை காத்திருக்கவும்

இப்படிக்குஉங்கள்

ராணி.

தபாலை எழுதி முடித்து விட்டு பஸ் நிற் கும் வரை காத்திருந்தாள்.

பஸ் இடையில் நின்றதும் ஓடிப் போய் தபாலை.. பேட்டு விட்டு வருவதற்குள் பஸ் புறப்பட அவசரமாக ஏறும்போது அவள் கால் தடக்கி..விழுந்த போது அவள் உதடுகள் தடுமாறின.

அவள் வார்த்தைகளை தன் காதலுக்கு கொடுத்துக் கொண்டே மரணித்து விட்டாள் ராணி.

பயணிகள் என்ன செய்வது என்று புரியாத போது அவள் உள்ளங்கையில் ஹரியின் பெயரும், தொலைபேசி இலக்கமும் இருப்பதைக் கண்டு உடனே அவனை வரவழைத்தார்கள்.

அவன் ஆசைகள் எல்லாம் மண்ணுக்குள் புதைக்கப்பட்டன.அவன் தன் காதல் சாம்ராஜ்சியம் சரிந்து போயின என கதறினான்.

அவள் நினைவாக அவள் காதலை மட்டும் சுமந்து கொண்டு கல்லறையில் தன் இறுதிப் பாடலை பூவாகத் தூவுகின்றான் ஹரி…..

ஓ ராகினி என் உயிர் நீயடி நீ இல்லையே நான் ஏதடி........ராகினி.

ராகினி

germany