Friday, March 30, 2007

கனவுகள் சிதைந்தன

எனக்குப் பிடித்த பழைய பாடல்களை எனது கவிதைகளுடன் கேட்க கீழ்வரும் இணைப்புகளை அழுத்துங்கள்... [NEW]

என்றும் இனியவை-1

என்றும் இனியவை-2

இசையும் கதை கவிதைகள் சிறுகதை என் குரலில் கேட்க இங்கே.அழுத்தவும்

http://clearblogs.com/piriyaa/






கனவுகள் சிதைந்தன.


சரவனன் வேப்பமரத்தின் கீழ் இருந்த நாற்காலியில் மெல்லென சாய்ந்தபடி.. தெண்றலை சுவாசித்துக்கொண்டு இருந்தான்..


மனைவி..விசாலி.என்ன..வேப்பமரத்தடிக்கு போய்விட்டீர்களா..என்றாள் சாப்பாடு முடிந்ததும் உடனே.. நிழலைத்தேடி போடுவார்.


என புலம்பியபடி..தண்ணீரைக்கொண்டுபோய் கொடுத்தாள்..என்னடி என்தநேரமும் புறுபுறுத்தபடி..என்ன வேணும் உனக்கு இல்லை.

சாப்பிட்டகையுடன் மரத்தின் கீழ்வந்து உற்கார்ந்தால் சாப்பிட்டஉணவு செமிக்கவேண்டாமே...கொஞ்சநேரம் நடந்தால்தானே..நல்லது.ம்..ம்..இன்று ஒருநாள்தான் லீவு மற்றய நாள் முழுதும் வேலை தானே.. என்றான் ..சரவனன் சரி..சரி..இந்தாங்கோ.. தண்ணீரை குடித்து விட்டு இருங்கள் எனக்கு வோலை இருக்கின்றது நான் போறோன் என கூறிய படி அவள் செல்ல..சரவனன்உனக்கு நெடுக வேலை நீயும் கொன்சநேரம் இதிலை இருநல்ல காத்து வீசுது என்றார்.


சரவணன்இல்லை இல்லை தம்பி வரும் நேரம் அவனுக்கு சாப்பாடு எடுத்து வைக்க வேணும் சாப்பாடு போடுவதற்குள் கத்துவான் பசிக்குது என்று.

பிள்ளை பாவம் அவனும் நம்முடன் இருக்கும்வரைதானே...நாமும் கவனிக்க முடியும்அவனுக்கும் நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்தால் நாமும் பேரப்பிள்ளைகளுடன் பொழுது போகும் என்றாள் விசாலி.சரவணன்முதல் மகளுக்கு திருமணம் முடியட்டும் விசாலி.

அதன் பின் அவன் திருமணத்தைபற்றி யோசிப்போம் அவனின் சம்பளத்தில்தானே..நம் வாழ்க்கை ஓடுகின்றது..என் சம்பளம் மட்டும் போதுமா..நான் உளைத்து என் மருந்து செலவுக்கே.. போதாது..நெஞ்சு வலி எப்ப படுக்கையில் போடுமோ..தெரியாது. என்றான்.

விசாலி..

அவள் படிப்பு படிப்பு என்று திரிகின்றாள் படிப்பு முடிய என்னும் இண்டு வருடம் இருக்கின்றது அதற்கிடையில் அவனுக்கு திருமணம் முடித்தால் நல்லது.எனி உங்கள் விருப்பம்.

என்றபடி எழுந்து வீட்டுக்குள் சென்றாள்.மகன் சுதா.. வேலை முடிந்து வந்தான்அம்மா..என அழைத்தபடி..வீட்டுக்குள் நுழைந்தன்.

விசாலி.. ராசா வந்தாச்சா..சரி கை கால் கழுவி விட்டு வா..சாப்பிட என அழைத்தாள் சுதா..அம்மா..தங்கை சாப்பிட வந்து விட்டாளா....ஓம்...ராசா.. சாப்பிட்டுபடிக்க போய்விட்டாள் என்றாள்..சுதாவும் சாப்பாட்டை முடித்து விட்டு.

அருகில் இருக்கும் பார்க்குக்கு நடந்து சென்றான்.

அவனுக்கு பூக்களை ரசிப்பதில் ஆர்வம் உடையவன் அழகிய பூங்காவனத்தை சுற்றிவருவான் சற்றி வரும்பொழுது மலரின் நடுவில் கருவிழி அவன் கண்னைப்பறித்தது.
பூக்களை அகற்றி பார்வையிட்டான் யார் இவள் மெய்சிலிர்க்க வைக்கின்றாளே..இவளை இதுவரை இங்கு பார்த்ததும் இல்லை யாரோ..நீ.. என.. சிந்தித்தான் சுதா.


படம் சுள்ளான்
பாடல் யாரோ நீ.. பிஞ்சுநிலவா....

அவன்..மனது அலைமோதிக்கொண்டது.

பிரியா.. தன் குடும்பத்துடன் பார்க்குவந்திருந்தாள்.
தன் தங்கையுடன் பூங்காவனத்தை சுற்றிப்பார்து முடித்துவிட்டு தாயிடம்வந்தாள்.

என்ன பிரியா.வீட்டுக்கு போவோமா....? என..அழைத்தார் அவள் மாமா..சுதா...ஓ...உன் பெயர் பிரியாவா.. ம்.. உன்னைப்போல் அழகிய பெயர் என என்னிக்கொண்டான்அவளும் சரி எனக் கூறி எல்லோரும் புறப்பட்டார்கள்.சுதாவுக்கு ஏமாற்றம் விசாரிப்பதற்க்குள் போய் விட்டார்கள் என்ற ஏமாற்றம்.
அவனும் வீட்டுக்கு செல்கின்றான் அவள் நினைவுகளை தன்னுடன் எடுத்துக்கொண்டு.

இவள் எனக்காக படைக்கப்பட்டவள் இவள் தான் என் வாழ்க்கை துணையாக வேண்டும்.
இவள் இல்லையெனில் எனக்கு வாழ்க்கை இல்லை இவளை நான் அடைய வேண்டும்.
அப்போதுதான் என்வாழ்வில் வசந்தம் ஏற்படும். என்ற படி வீட்டுக்குள் நுழைந்து தன் கட்டிலில் அமர்ந்தான் அம்மாவிடம் சொல்லவேணும் எப்படி ஆரம்பிப்பது.
இருக்கட்டும் மீண்டும் இளை சந்தித்த பின் அம்மாவிடம்கூறுவோம் என..சற்று சரிந்தான் உறக்கம் கொள்ள சுதா..அவனுக்கு உறக்கம் வர மறுக்கின்றது அவள் முகம் அவனை வாட்டியது.

தாய் கதவை தட்டி..தம்பி.தம்பிசுதா..இந்தாடா..தேனீர் கதவை திற தம்பி..என மீண்டும்மீண்டுமாக தட்டினாள் விசாலி.

அவனுக்கு கதவின் சத்தம் கூட காதில் கனவாக கேட்டது.தாய் மீண்டும் தட்டுகின்றாள்..ராசா தம்பி எத்தனை தடவை கதவை தட்டினாலும் திறக்கின்றாய் இல்லையே..சுதா..சுதா.. ..என கூப்பிட அவன் திடுக்கிட்டபடி..அம்மா..என கூப்பிட்ட வாறு கதவை திறந்தான் என்னடா..எத்தனை தடவை கதவை தட்டுகின்றது என கேட்டவாறு தேனீரை கொடுத்து விட்டு திரும்பினாள்விசாலி..

இன்று இவனுக்கு என்ன நடந்தது தினமும் வேலையால் வந்தவுடன் பார்க்குக்கு..போய் வந்த எங்களுடன் சிரித்து கதைத்துவிட்டத்தான் தன் றூமுக்குள் நுலைவான்..இன்று போய் வந்ததும் கதவை பூட்டி விட்டு உறங்கு கின்றான் ம்..என்ன அவனுக்கு வேலைக்கலையாக இருக்கும் பாவம் உறங்கட்டும் பிள்ளை.

என கூறிக்கொண்டுசரவணனுக்கு தேனீர் எடுத்துக்கொண்டு சென்றாள் விசாலி.

சரவணன். என்ன செய்கின்றான் சுதா எனக்கேட்கவிசாலி.

அவன் உறங்குகின்றான் என்ன இன்று கதைக்ககூட இல்லை ஏன் என்னவாம்..என தேனீரை அருந்திக்கொண்டு சரவணன் கேட்கவிசாலி என்னமோ..இன்று பிள்ளையின் முகத்தில் ஒருமாற்றம் தெரியுது ஒரு வேளை வேலை கூடவோ தெரியவில்லை..என்றாள்.

அவனை கூப்பிடப்பா..என்ன என்று கேட்பதில்லையா.?

சுகமில்லையோ..தெரியாது போய் பாரும் போம். விசாலி மகனை அழைத்தாள்.சுதா...சுதா..இங்கே..வா..அப்பா வரட்டுமாம்வா..ராசா.வா..என அழைக்க.சுதா..என்னம்மா..என்ன..உன்னை அப்பா வரட்டுமாம்அப்பா.. என்ன சொல்லுங்கள் எனக்கேட்க.ஏன்டா.. என்ன இன்று அப்பாவுடனும் கதைக்காமல் என்ன தூக்கம் என்ன ஆச்சு உனக்கு.ஒன்று இல்லை அப்பா லேசான தலைவலி சரி யாகி விடும் எனக்கூறிக்கொண்டே மீண்டும் தன் படுக்கையறைக்குச் சென்று உறங்க முயற்சி செய்தான் அவனால் முடியவில்லை அவள் முகம் அவனை வருடியது.அவன் தன் நிலையை சிந்திக்கின்றான்.

தன் குடும்பப்பொறுப்பை சுமந்து வரும் இவன் தன் திருமணத்தை நினைக்க அவனால் முடியவில்லை..இருந்தும் இதயத்தில் தீடீரென ஏற்பட்ட மாற்றம் அவனை திக்கித்தினற வைத்தது. தன் தேடலா..இல்லை.. குடும்பச்சுமையா..கேள்வி..ஏழுகின்றது அவன் மனதில்..

படம் ரட்சகன்.
கனவா..இல்லை காற்றா..

அதிகாலையும் ஆகிவிட்டது அவன் மறுபடியும் வேலைக்கு புறப்படுகின்றான்..விசாலி... தம்ப பணம் இருந்தா..கொடு அப்பாக்கு மருந்து வாங்கவோணும் எனக் கேட்க அவனும் பணத்தை கொடுத்து விட்டுபுறப்படுகின்றான்.

அங்கும் அவனால் வேலை செய்ய முடியவில்லை.அவளை இன்றும் பார்க்கில் காணமுடியுமா..அவள் எனக்கு கிடைத்தவரம் அவளின்றி எனி எவளுக்கும் என் இதயத்தில் இடம் கொடுக்க முடியாது.

பிரியா..நீ..இல்லாத வாழ்க்கையை என்னால் கற்பனை பண்ணமுடியாது நீ..கனவாக முடிந்து விடாதே என் வாழ்வில் மனவியாக நீ..வரவேண்டும். என் இதயத்தில் முதல் இடம்பிடித்தவள் நீ...உன்னை சந்தித்தபின்புதான் நான் காதலை உணர்ந்தேன்.

பிரியா..நீ..எனக்குத்தான் கிடைக்கவேணும்அமைதியாக இருந்த எனை அலைமோதவைத்துவிட்டாய்இன்று நான் உனை பார்வையிட வேண்டும்வந்துவிடு பிரியா.. வந்துவிடு அவன் தவிப்பு ஏக்கம் துடிப்பு எல்லாம் அவளையே..சுற்றியது.

அவன் மனது
வேலை முடிந்ததும் அவன் அவசர அவசரமாக.வீட்டுக்கு வந்து தன்னை அழகு படித்திக்கொண்டு உடனே.

பார்க்குக்கு புறப்படுகின்றான் சுதா..தம்பி சாப்பாடு போடவா..என விசாலியின் குரல் இல்லை நான் வந்து சாப்பிடுகின்றேன்.

அதுசரி..எங்கோ அப்பா..?எனக்கேட்டவாறு வெளியே..வந்தான் சுதா.அவர் வெளியே போறேன் என்று சொல்லி விட்டு போனார் என்னும் வரவில்லை தம்பி..என்றாள் விசாலி.நீ..என்ன அவசரத்தில் நிக்கின்றாய் சாப்பிடவும் இல்லை.இல்லை அம்மா..சதீஸ்சுடன் அவசரமாக வெளியே போய் வருகின்றேன் வந்து சாப்பிடுகின்றேன் என கூறிவிட்டு அவளை காண ஆவலுடன் புறப்பட்டார்கள் இருவரும்.

அங்கே..இருவரும் தரையில் உற்காந்து கொண்டுபேசிக்கொள்கின்றார்கள்.என்ன சுதா..என்னும் வரவில்லை..உன் பிரியா..எனக்கேட்டான் சதீஸ்இன்று..வருவாள் கெஞ்சநேரம் பார்ப்போம் பொறடா எப்பவும் உனக்கு அவசரம்தான் ம்..சரி. சரியாடா.. அவளைப்பற்றிய விபரம் தெரியாமல்நீ...சும்மா..காதல் காதல் என்று திரியாமல் அமைதியா இருடாசுதா..உன்னை நம்பி உன் குடும்பம் உன் அப்பா..வேறுநெஞ்சுவலியால் துடிக்கின்றார் அதோடும் சின்னவேலை செய்கின்றார் நீ..பாவம் என்று. சிந்தியடா.. சுதா..என்னமோ.நீ..முடிவெடுத்தால் மாறமாட்டாய் சரி வரட்டும் பார்ப்போம் அவளை.என்றான் சதீஸ்.


தெரியுமடா..எனக்கு தெரியும். அதற்காக நான் காதலிப்பது தவறா..திருமணம் செய்துவிட்டும் அவர்களைப்பார்க்கலாம்தனே... எனக்கு முதல் அம்மா அப்பா தங்கை அதன் பின்புதான் எனக்கு அவள் மனவி.அதில் எந்தமாற்றமும் இல்லை.

இருந்தும் அவளை நேற்ருப் பார்த்ததில் இருந்துஎன்னால் அவளை விட முடியவில்லை நான்இன்று அவளிடம் கதைக்க ஆரம்பிப்பதாக இருக்கின்றேன் என சொல்லிய படி தலையை நிமிர்தினான் சுதா..அவள் வரவு அவன் கண்ணில்...ஒளிவீசியது


படம்...அயோத்தியா.
பாடல்... சிவகாசித்தீ....விழிகள்டேய்..
சதீஸ்..டேய் அங்கே..பாறடா..தன் குடும்பத்துடன் வருகின்றாள் பார் எனக் கூறினான் சுதா.அவனும் பார்த்துக்கொண்டோ..என்னடா...இருவார் வருகின்றார்கள் இதில் யார் பிரியா. எனக் கேட்டான் சதீஸ். அந்த குங்குமக்கலரில் வரும் என் குங்கமநாயகி..என்றான்.சுதா..மறுபுறம் இருந்ததந்தை சரவணனும் பார்வையிட்டார். அவளைஓ….இதுதான் உன் தலைவலிக்கு காரணமா ?
யார் என விசாரித்து முடித்துவிடுகின்றேன் எனமனதுக்கு நினைத்துக்கொண்டு அமைதியாக இருந்தார்சரவணன்.சதீஸ்..ம்....இந்தஅழகில் விழுந்து மூழ்கிவிட்டாய் எனி..உன்னை எழுப்புவதெண்றால் பிரியாதான் வர வேண்டும்எனக்கேலிசெய்தான்.ஆமாம் எனக்கு அவள் இல்லை என்றாள் என் திருமணம் இந்த ஜென்மத்தில் இல்லை..என கூறினான்.சரிடா..சரிடா. இன்று கதைக்கஆரம்பி பின்புஉன் காதலை கூறு என்றான்.சதீஸ்பிரியாவும் பார்க்குக்குள் வந்து தன் தங்கையுடன் மீண்டும்அழகிய பூக்களை ரசித்துக்கொண்டு நடந்தாள்.சுதா...வின் பார்வை அவளை மட்டுமே..பார்வையிட்டதுஅவளின் தந்தை பிரியா..கவனம் கெதியில் வரவும்எனக்கூறிக்கொண்டு பச்சைப்புல்லின்மேல் உற்காந்தார்.அங்கே...பிரியாவின் தந்தை கணேஸ் தன் நண்பனை சந்திக்கின்றார்.சுரேன்.


என்ன கணேஸ் இரண்டு வருடத்தின் பின்பு மீண்டும் உங்கள் தங்கையை காண வந்திருக்கின்றீர்களா?ம்.ம். தங்கையை பார்க்கவேணும் போல் இருந்தது அதுதான் வந்தோம் நாளை புறப்படுகின்றோம் என்றார் இதைக்கேட்டதும் சுதா..துடித்தான்..டேய்....டேய்..சதீஸ்...என்னடா. இப்படியொரு தண்டனைஇவள் யாரடா....என்னை வதைப்பதற்கு என்று வந்த தேவதையா...? இவள் என் கண்ணில் பார்வையிட மட்டும் வந்தாலா..?இல்லை ..என்ன நடந்தாலும் பறவாய் இல்லை வா...உடனே..என் காதலை சொல்வதுதான் சரி.அவள் எனக்கு மட்டும் தான் எழும்படா..... எழும்பு..என சதீஸ்சின் கையை பிடித்து இழுத்தான் இருவரும் எழுந்து நடக்க ஆரம்பித்தார்கள் சுரேன் கணேசின் இருவரின் உரையாடலை கேட்டுக்கொண்டு அவளை நோக்கி நடந்தார்கள் சுதாவும் சதீஸ்சும்

அதுசரி. கணேஸ்..பிரியாவுக்கு என்னும் திருமணம் செய்ய சிந்திக்கவில்லையா?இல்லை படிப்பு அது இது என்று சொல்கின்றாளா..?இல்லை சுரேன் அவள் வாறமாதம் அமெரிக்கா..புறப்படுகின்றாள் அவளுக்கு தங்கையின் மகனை பேசி முடித்துவிட்டோம் இதுவிடயமாகத்தான் இப்போ..வந்தோம் நாளை புறப்படுகின்றோம் என்றார்.

பிரியாவின் தந்தை.இதைக்கேட்ட சுதா.. சதீஸ்..இது பொய்தானே..இல்லை நீ...கேட்டாயா..அவர்கள் சொன்னதை இவளை நான் இழக்கமாட்டேன் என சுதா..புலம்பியதை கேட்டார் சரவணன் கடவுளே..என்றவாறு நெஞ்சுவலியால் சரிந்து விட்டார் சரவணன்.டேய் சுதா..அமைதியாக இரு இதற்குத்தான் சொன்னான் விசாரிக்காமல் முடிவெடுக்காதே..என. நீ..கேட்கவில்லை அமைதியா..இருடா..எனக்கத்தினான் சதீஸ்இல்லை..அவள் தான் என் மனைவி..அவள் என் மனைவி என புலம்பினான் சதீஸ்சால் அவனை சமாதனப்படுத்த முடியவில்லை.சுதா..தன் நிலை மறந்தான் அவளை மறக்கமுடியாமல் தவித்தான் துடித்தான். நான் உன்னை என்னும் காதலிப்பேன் உன் நினைவுகள் போதும்டி பிரியா.. போதும். எனக்கு.

ஓ.....பிரியா..பிரியா..என் பிரியா..பிரியா..
---------------


இருவரும் உயிரைக்கொடுத்து காதல் செய்தால் தான் காதல் ஜெயிக்கும்.இல்லை..இல்லை மரணம் வரை கண்ணீர்தான்.

நன்றியுடன்
ராகினி.
ஜேர்மனி.







No comments: